எறும்பு திரை விமர்சனம்

விவசாயக் கூலியான சார்லி, காட்டு மன்னார்கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். வட்டிக்கு கடன் வாங்கி, கடன் வாங்கியவரிடம் அவமானப்படுத்தப்படுகிறார். முதல் மனைவி இறந்துவிட, மகள் மோனிகா சிவா, மகன் சக்தி ரித்விக், இரண்டாம் மனைவி சூசன் ஜார்ஜ், கைக்குழந்தை மற்றும் தாய் பல்ரவை சுந்தராம்மாள் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். சார்லி கடுமையான கடன் மற்றும் வறுமையிலும் நாட்களைக் கடந்து வருகிறார். இதனிடையே கந்துவட்டிக்காரர் எம்.எஸ்.பாஸ்கரிடம் முப்பதாயிரம் ரூபாய்க் கடனை பெறுகிறார்.

இதனை அடைக்க முடியாததால் ஊர் மக்கள் முன் சார்லி அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் மனமுடையும் சார்லி, தனது இரண்டாவது மனைவியுடன் கரும்பு வெட்டும் வேலைக்காக 15 நாட்கள் செல்கிறார். இந்நிலையில் சார்லி குடும்பத்தின் ஒரே சொத்தாக இருக்கும் ஒரு கிராம் மோதிரத்தை சக்தி ரித்விக் தொலைத்துவிடுகிறான். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கும் மோனிகா சிவா மற்றும் சக்தி ரித்விக், சித்தி வீடு திரும்புவதற்குள் தொலைந்த மோதிரத்தை தேடி அலைகிறார்கள்.

இறுதியில் இதனை கண்டுபிடித்தார்களா? வாங்கிய கடனை சார்லி அடைத்தாரா? தனது சித்தியை எப்படி சமாளித்தனர்? என்பதே படத்தின் மீதிக்கதை. வறுமையான சூழலில் தனது குழந்தைகளை வளர்த்தெடுக்கும் தந்தையாக சார்லி கண்கலங்க வைத்துள்ளார்.

அவமானப்படும் குடும்பத் தலைவனாகவும், பாசக்கார தந்தையாகவும் இவரின் அனுபவ நடிப்பு கைத்தட்டல் பெறுகிறது. தாயை இழந்து வாடும் குழந்தைகளாக நடித்திருக்கும் மோனிகா சிவா மற்றும் சக்தி ரித்விக் அழகாக நடித்து கதாப்பாத்திரத்தை நியாப்படுத்தியுள்ளனர். சூசன் ஜார்ஜ் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

குடும்ப சூழலால் கடன் வாங்கி சிக்கிக்கொள்ளும் தந்தையை பற்றிய கதையை எடுத்து காட்டியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் ஜி. திரைக்கதையின் வலுவில்லாததால் அடுத்து என்ன நடக்க போகிறது என்று எளிதாக கணிக்க முடிகிறது, இது படத்திற்கு பாதகமாக அமைந்துள்ளது. குறுகிய கதாப்பாத்திரம், சிறிய வீடு, குடும்பம் என இதுவரை தமிழ் சினிமாவில் தோன்றிய விஷயங்களே தென்படுகிறது.

திரைக்கதையிலும் கதாப்பாத்திர வடிவமைப்பிலும் இயக்குனர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். கே.எஸ்.காளிதாஸின் ஒளிப்பதிவு ஓகே. இசையமைப்பாளர் அருண் ராஜ் அவரின் பணியை செய்துள்ளார். மொத்தத்தில் எறும்பு – வேகம் குறைவு

erumbu movie review
jothika lakshu

Recent Posts

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

7 hours ago

ஸ்டைலிஷ் உடையில் சமந்தா, போட்டோஸ் இதோ.!!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை…

14 hours ago

வடசென்னை 2: தனுஷ் சொன்ன தகவல்.!!

வடசென்னை 2 படம் குறித்து தனுஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.…

15 hours ago

டான்ஸ் ஆடுவது குறித்து தமன்னா சொன்ன தகவல்.!

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து…

15 hours ago

முத்து விரித்த வலை,சிக்கினாரா விஜயா? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நான் இது…

17 hours ago

சிங்காரம் சொன்ன வார்த்தை, சூர்யாவின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

18 hours ago