தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடந்து முடிந்ததைத் தொடர்ந்து தற்போது ஹாட் ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் போட்டியாளர்கள் மீண்டும் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் சில காரணங்களால் அவர் விலகிக்கொள்ள தற்போது அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.
விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த நிகழ்ச்சியும் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. ஆமாம் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருபத்தி நான்கு மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வர இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.
