Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மொத்தமாக முடிவுக்கு வரப் போகும் பாக்கியலட்சுமி சீரியல், வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்

end card to baakiyalakshmi serial update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று பாக்கியலட்சுமி. கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் எதார்த்தமான நடிப்பால் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் தற்போது பெரிதாக கதை இல்லாமல் கண்டமேனிக்கு உருட்டத் தொடங்கி விட்டனர். தற்போது கோபி மட்டுமே திருந்தாமல் இருந்து வரும் நிலையில் விரைவில் அவருக்கும் ஒரு கதையை கொண்டு வந்து இந்த சீரியலை மொத்தமாக முடிக்க விஜய் டிவி முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த கதைக்கு பதிலாக பனி விழும் மலர் வனம் என்ற பெயரில் புதிய சீரியலை களத்தில் இறக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சீரியலில் ஈரமான ரோஜாவே சீரியல் புகழ் சித்தார்த் ஹீரோவாக நடிக்க பாரதி கண்ணம்மா வினுஷா நாயகியாக நடிக்க உள்ளார். மேலும் அண்ணா சீரியலில் முத்துப்பாண்டி வேடத்தில் நடித்து வரும் சத்யாவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெகு விரைவில் இந்த சீரியல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

end card to baakiyalakshmi serial update
end card to baakiyalakshmi serial update