முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள பாலாடை உதவுகிறது.
இன்றைய காலகட்டத்தில் முகப்பொலிவிற்கு கிரீம்கள் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் அது நம் உடலுக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஆரோக்கியமான முறையில் பாலாடையை கொண்டு முகத்தை தெளிவாக வைத்துக் கொள்ள முடியும்.
முதலில் முகத்தை கழுவி காய்ந்த பிறகு பாலாடை கட்டியை தடவி மசாஜ் செய்து விட வேண்டும். பிறகு காலையில் முகத்தை கழுவ வேண்டும். மேலும் அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து தடவி 20 நிமிடத்தில் கழுவினால் சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை நீக்கி தெளிவாக வைத்துக்கொள்ளும்.
முகத்தில் உள்ள புள்ளிகள் நீங்க பாலாடையில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.
எனவே ஆரோக்கிய மற்ற பேஸ் வாஷ்கள் பயன்படுத்துவதை விட ஆரோக்கியம் நிறைந்த பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத பாலாடை பயன்படுத்தி நம் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம்.