Tamilstar
Health

குளிர்காலங்களில் வரும் சளி இருமலுக்கு உதவும் உலர்ந்த இஞ்சி.

Dry ginger helps with colds and coughs in winters

குளிர்காலங்களில் வரும் சளி இருமலுக்கு உலர்ந்த இஞ்சி பயன்படுகிறது.

பொதுவாகவே மழைக்காலங்களில் மற்றும் குளிர் காலங்களில் இருமல் சளி வரக்கூடும். அந்த நேரத்தில் உலர் இஞ்சி மருந்தாக பயன்படுகிறது. ஏனெனில் இதில் கால்சியம் மெக்னீசியம் நார்ச்சத்து சோடியம் துத்தநாகம் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இதனால் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

மேலும் உலர்ந்த இஞ்சி தண்ணீரை குடிக்கும் போது எடை குறையவும் மூட்டு வலிக்கு நிவாரணமாகவும் இருக்கிறது.

வயிற்றுப் பிரச்சனைகளான வாயு மற்றும் அஜீரண பிரச்சனைக்கு உலர்ந்த இஞ்சி பொடியை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குடிக்க வேண்டும்.

பசியின்மையால் அவதிப்படுபவர்களுக்கு இஞ்சி பொடியை கல்லுப்பில் கலந்து சாப்பிட்டால் பசியை அதிகரிக்கும். பித்த பிரச்சனை இருப்பவர்கள் உலர்ந்த இஞ்சியை பயன்படுத்தினால் மிகவும் நல்லது.