முருங்கையின் காய்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள் கூட சாப்பிட தகுந்ததாக உள்ளது. இந்த முருங்கை பொடி இன்று மிகவும் பிரபலமடைந்து வருகிறது.
முருங்கையில் அதிகளவு விட்டமின்கள், மினரல் மற்றும் அமீனோ ஆசிட்கள் உள்ளன. இதில் போதுமான அளவு விட்டமின் ஏ,சி, மற்றும் இ உள்ளது. மேலும், இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் அடங்கியுள்ளது.
முருங்கை இலை பவுடரில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள், செல்களில் ஏற்படும் சேதம், மன அழுத்தம், வீக்கங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமாவதை தடுக்கவும் இது உதவுகிறது.
முருங்கை இலையின் பொடியானது பல்வேறு அழற்சிகளில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக, நீரிழிவு, கார்டிவாஸ்குலர் இதய நோய், ஆர்த்தரிட்டிஸ், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.
இது உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் குளோக்கோஸை குறைக்கிறது. இது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இது உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைத்து, சர்க்கரை நோய் அறிகுறிகளில் இருந்து காப்பாற்றும்.
முருங்கை இலையின் பொடியானது, மூளையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இது அல்சைமர் நோயை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் உள்ள விட்டமின் இ மற்றும் விட்டமின் சி ஆனது, மன வளம், நியாபக திறன் ஆகியவற்றை பாதுகாக்க உதவுகிறது
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…