‘Drishyam 2’ will be released live on ODT - Mohanlal announcement
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது.
இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
தற்போது 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். இதிலும் மோகன்லாலே ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனா நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டீசரை வெளியிட்ட மோகன்லால். இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி இப்படத்தை விரைவில் அமேசான் பிரைமில் வெளியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகர் ஒருவரின் படம் ஓடிடி-யில் வெளியாக உள்ளது மலையாள திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…