டபுள் டக்கர் திரை விமர்சனம்

சிறுவயதிலேயே தாய் தந்தையை விபத்தில் இழக்கிறார் நாயகன் தீரஜ். இந்த விபத்தின் போது முகத்தில் காயங்களுடன் உயிர் தப்பிக்கிறார் தீரஜ். தன்னுடைய முகம் தீ காயத்துடன் இருப்பதால் முகத்தை யாருக்கும் காட்டாமல் இருக்கிறார். இவர் பிரபல தாதாவான மன்சூர் அலிகான் மகள் ஸ்மிருதி வெங்கட்டை காதலிக்கிறார். ஆனால் ஸ்மிருதி வெங்கட், தீரஜ் காதலை ஏற்க மறுக்கிறார். இதனால் தற்கொலை முயற்சி செய்யும் தீரஜ், அவர் உயிர் பிரிவதற்கு முன் ரைட் லெப்ட் என்னும் இரண்டு தேவதைகள் அவர் இறந்து விட்டதாக நினைத்து உயிரை எடுத்து விடுகிறார்கள். தீரஜ் ரைட், லெப்ட் தேவதைகளிடம் சண்டைபோடும் நேரத்தில், அவரது சடலமும் காணாமல் போகிறது.தற்காலிமாக வேறொரு உடலுக்குள் தீரஜ் ஆத்மா புகுந்துக்கொள்ள காணாமல் போன தீரஜ் உடலை தேடுகிறார்கள்.

இறுதியில் தீரஜின் உடல் கிடைத்ததா? தீரஜ் சடலத்தை திருடியவர்கள் யார்? தீரஜ், ஸ்மிருதி வெங்கட் காதல் கைக்கூடியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.நடிகர்கள்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தீரஜ், இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து அசத்தி இருக்கிறார். தீ பட்ட காயத்தில் உள்ள தீரஜ் பரிதாபத்தையும், மற்றொரு தீரஜ் துறுதுறுவான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக காதல், காமெடி காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார்.நாயகியாக வரும் ஸ்மிருதி வெங்கட் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். நடிக்கும் வாய்ப்பை அழகாக பயன்படுத்தி இருக்கிறார். ரைட் லெப்ட் – ஆக வரும் முனிஸ்காந்த், காளி வெங்கட் இருவரும் காமெடி செய்து சிரிக்க வைத்து இருக்கிறார்கள். சுனில் ரெட்டி, ஷாரா இருவரும் டைமிங் காமெடியில் கவனிக்க வைத்து இருக்கிறார்கள்.

மன்சூர் அலிகான், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.இயக்கம்ஃபேண்டஸி காமெடியை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மீரா மஹாதி. கூடு விட்டு கூடு பாயும் வித்தை, ரைட் லெப்ட் பேசும் வசனங்கள், மேலும் ரைட் லெப்ட் அனிமேஷன் கதாபாத்திரத்தில் ரஜினி, சூர்யா வேடத்தில் தோன்றி வருவது சிறப்பு. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை காமெடியால் ரசிக்க வைத்து இருக்கிறார். அனிமேஷன், கிராபிக்ஸ் காட்சிகள் சுவாரஸ்யமாகவும், கலர்புல்லாகவும் அமைந்து இருக்கிறது.இசைவித்யாசாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு ஏற்றார் போல் அமைத்து இருக்கிறார்.ஒளிப்பதிவுகௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். வெற்றிவேலின் படத்தொகுப்பு கச்சிதம்.தயாரிப்புஇத்திரைப்படத்தை ஏர் ஃப்லிக் நிறுவனம் தயாரித்துள்ளது.”,

double tuckerr movie review
jothika lakshu

Recent Posts

சன் டிவியில் மூன்று சீரியல்கள் இணையும் மெகா சங்கமம்..!

சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென…

15 minutes ago

சுந்தரவல்லி வளையில் சிக்கிய சூர்யா, நந்தினிக்கு விழுந்த அறை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

24 minutes ago

தளபதி விஜய்க்கு திரிஷா சொன்ன வாழ்த்து..!

விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…

7 hours ago

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட் யார் தெரியுமா?முழு விவரம் இதோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…

8 hours ago

மதராசி : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

8 hours ago

அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

22 hours ago