மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
பொதுவாகவே அனைவருக்கும் வரும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று மலச்சிக்கல். இது வந்தால் மிகவும் சிரமமாக இருக்கும். அப்படி நாம் மலச்சிக்கலில் இருந்து விடுபட நெல்லிக்காயை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குடலை சுத்தம் படுத்தி மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. நெல்லிக்காய் பொடியை சுடு தண்ணீரில் போட்டு சிறிதளவு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.
அப்படி தொடர்ந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை வராது. நெல்லிக்காய் பொடி மட்டுமில்லாமல் நெல்லிக்காயை ஜூஸ் போட்டு குடித்து வந்தாலும் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
எனவே பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த நெல்லிக்காய் ஜூஸை குடித்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.