உணவில் தயிர் பச்சடி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்.
பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று பிரியாணி. இது மட்டும் இல்லாமல் ரொட்டிகளிலும் பலர் வெங்காயம் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிடுவார்கள். இது உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் அது அதிக அளவில் சாப்பிடும்போது அது சில தீங்கையும் விளைவிக்கிறது அது குறித்து பார்க்கலாம்.
தயிர் மற்றும் வெங்காயம் கலந்து அதிகப்படியாக சாப்பிடும்போது அது உடலில் இருக்கும் நச்சுக்களின் அளவை அதிகரித்து சொரி, சிரங்கு ,சரும பிரச்சனைகளை உருவாக்கக்கூடும்.
குறிப்பாக வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான குடலில் வலி ,வாந்தி, குமட்டல் பிரச்சனைகளை உருவாக்கி விடுகிறது. குறிப்பாக உடலில் நீர் பற்றாக்குறையை ஏற்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே ஆரோக்கியம் தரும் எந்த ஒரு உணவும் அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது அது நம் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து அளவோடு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.