நம் உடலில் வைட்டமின் பி12 குறைந்தால் எந்தெந்த பிரச்சனையை எதிர்கொள்ள கூடும் என பார்க்கலாம்.
பொதுவாகவே நம் உடலுக்கு தேவைப்படும் வைட்டமின்களில் மிகவும் அவசியமான ஒன்று வைட்டமின் பி12. ஆனால் பெரும்பாலோனோர்க்கு இந்த ஊட்டச்சத்து மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனால் நாம் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
முதலில் வைட்டமின் பி12 குறைவாக இருக்கும் போது உடல் சோர்வு இருக்கக்கூடும். ஏனெனில் செல்கள் சரியாக செயல்பட பி 12 மிகவும் அவசியம்.
பி12 குறைந்தால் ரத்த சிவப்பணு உற்பத்தியை குறைத்து உடலின் ஆக்சிஜன் அளவை பாதித்து விடும்.
மேலும் சரும மஞ்சள் நிறமாக மாறிவிடும். இது ரத்த சிவப்பணு உற்பத்தியை பாதிப்பதால் ரத்த சோகை பிரச்சனை வரக்கூடும். மேலும் கண்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
இது மட்டும் இல்லாமல் நம் உடலில் வைட்டமின் பி12 குறைய தொடங்கினால் நரம்பியல் சார்ந்த பிரச்சனைகள் அதிகமாக வரக்கூடும்.
அதில் ஒன்று தலைவலி. தலைவலி அதிகமாக அடிக்கடி வரும்போது கண்டிப்பாக மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும்.
வைட்டமின் பி12 குறைந்தால் வயிற்றுப் பிரச்சனைகளான வயிற்றுப்போக்கு வாந்தி மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தி விடும். முக்கியமாக வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தையே அதிகமாக பாதிக்கும் என்பதால் மனநலமும் பாதிக்கும். மேலும் மன அழுத்தம் மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனையை நாம் எதிர் கொள்ள வேண்டியது இருக்கும்.