தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி இவரது நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் ரிலீஸ் குறைத்து தகவல் வெளியாகி உள்ளது அதாவது இந்த படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
