Tamilstar
Health

மாரடைப்பு வருவதற்கான முக்கிய அறிகுறிகள் என்ன தெரியுமா?

Do you know the main symptoms of a heart attack

மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு வருவதற்கான அதிக காரணம் தவறான உணவு பழக்க வழக்கம். இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றன. மாரடைப்பு வர முக்கிய காரணம் இதயத்திற்கு ஓடும் ரத்த ஓட்டம் தடைபடுவது தான். அதற்கான சில அறிகுறிகளை வைத்து நாம் உயிரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

மாரடைப்பு வருவதற்கு முன்னால் மார்பில் வலி ஏற்படும். மயக்கமாகவும் சோர்வாகவும் இருக்கக்கூடும். மேலும் குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை மாரடைப்புக்கு முன் அறிகுறிகளாக இருக்கும்.

அதிகமாக வியர்த்து போகுதல் கை முதுகு தாடை பகுதிகளில் வலி, இடது பக்கம் அதிகமான வலி, போன்ற வலிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர் அணுகுவது சிறந்தது.

இதுவே மாரடைப்பு வருவதற்கான முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி உயிரிழப்பிலிருந்து பாதுகாக்கலாம்.