தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் சுசித்ரா நாயகியாக நடிக்க சதீஷ் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் நடித்து வரும் பெரும்பாலான பிரபலத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக பாக்யாவின் மருமகளாக நடித்து வரும் ஜெனிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த சீரியலில் ஜெனியின் கணவராக செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யன் விலகியதால் புதிய நடிகர் ஒருவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜெனியும் இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் நீங்களும் சீரியலில் இருந்து விலகுறீங்களா? இனிமேல் சீரியலையே பார்க்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.
