discovery channel published actor superstar rajini special video
இந்திய திரை உலகில் ரசிகர்களின் மத்தியில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த். அவர் தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க பல முன்னணி பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்காக படப்பிடிப்பு பணிகள் சென்னையில் உள்ள பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலக சிரிப்பு தினத்தில் டிஸ்கவரி சேனல் நடிகர் ரஜினிகாந்தின் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், நடிகர் ரஜினிகாந்தை போல ஸ்டைலாக கண்ணாடியை மாட்ட பலரும் முயற்சி செய்து வருகிறார்கள், ஆனால் எல்லாருமே சூப்பர் ஸ்டார் ஆக முடியாது எனக் கூறி இறுதியில் கருப்பு உடையில் ஸ்டைலாக ரஜினி கண்ணாடியை மாட்டுவது போல் அந்த வீடியோ முடிவடைகிறது. உலக சிரிப்பு தினத்தில் ரஜினியின் சிரிப்பை உதாரணமாக காட்டி அந்த ஸ்பெஷல் வீடியோவை டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ளது.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…