actress khushbu has denied about the film varisu
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவர் தற்பொழுது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், யோகி பாபு, பிரபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு எண்ணூரில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வாரிசு திரைப்படத்தில் நடிகை குஷ்பு நடித்திருப்பதாக பரவி வந்த தகவலை அவர் தற்பொழுது மறுத்திருக்கிறார். இந்த அதிர்ச்சி தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதாவது வாரிசு படத்தில் குஷ்பு நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் குஷ்பூ இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். விஜய் படத்தில் தான் நடிப்பதாக வெளியான செய்தியை மறுத்திருக்கின்றார். வாரிசு திரைப்படத்தில் விஜய் மட்டுமல்லாமல் பிரபு, சரத்குமார் உள்ளிட்டோரையும் சந்திப்பதற்காகத்தான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதாகவும் அப்போது அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலானதால் விஜய் திரைப்படத்தில் தான் நடிப்பதாக செய்தி வெளியானது என குஷ்பூ தெரிவித்துள்ளார்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…