யாரெல்லாம் நாவல் பழம் சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக இந்த சீசனில் நாவல் பழம் அதிகமாக கிடைக்கும். நாவல் பழம் சாப்பிடுவது ஆரோக்கியம் என்றாலும் அதனை சிலர் தவிர்ப்பது நல்லது. யாரெல்லாம் நாவல் பழம் சாப்பிடக்கூடாது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் நாவல் பழம் அதிகமாக சாப்பிடக்கூடாது.
நீரிழிவு நோயாளிகள் நாவல் பழம் சாப்பிடுவதில் கவனம் இருக்க வேண்டும்.
மேலும் சிறுநீர் கற்கள் பிரச்சனை இருப்பவர்கள் நாவல் பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
இது மட்டும் இல்லாமல் மலச்சிக்கல் பிரச்சனையையும் ஏற்படுத்திவிடும் மேலும் இரைப்பை பிரச்சனை உண்டாகக்கூடும்.
எனவே ஆரோக்கியமான உணவு என்றாலும், அது சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

