பிளாக் காபி குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை பார்க்கலாம்.
காலையில் தொடங்கும் போது பலரும் பால் டீ காபி குடிப்பது வழக்கம். அதிகம் குறிப்பாக பெரும்பாலானோர் பிளாக் காபி விரும்பி குடிப்பார்கள். பிளாக் காபி அதிகம் குடித்தால் அது உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.
பிளாக் காபி அதிகமாக குடிப்பதால் அது வயிற்றில் இறுக்கத்தை ஏற்படுத்தி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். பிளாக் காபி குறைவாக குடித்தால் அது உடலுக்கு எந்த தீங்கையும் விளைவிக்காது.
ஆனால் அதுவே அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது மன அழுத்தம் பதற்றம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தூங்கச் செல்லும் முன் பிளாக் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
எனவே பிளாக் காபி குடித்தால் உடல் நலத்திற்கு நல்லது என்றாலும் அளவுக்கு மீறினால் அதுவும் உடலுக்கு தீங்கையே விளைவிக்கிறது என்று அறிந்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.