Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருமணத்திற்கு பெரியம்மாவை அழைக்காத விக்னேஷ் சிவன்.. வெளியான ஷாக் தகவல்

Director Vignesh Shivan Relative about Marriage

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 வருடமாக காதலித்து நிலையில் நேற்று கோலாகலமாக அவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமண விழா மகாபலிபுரம் அருகே உள்ள ரெசார்ட்டில் படு விமரிசையாக நடைபெற்றது.

திரையுலக பிரபலங்கள் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவை மணந்து கொண்டார். இப்படி இருக்கும் சூழலில் விக்கியின் அப்பாவின் சகோதரர் மனைவி அதாவது பெரியம்மா விக்னேஷ் சிவன் தன்னை திருமணத்திற்கு அழைக்கவே இல்லை என தெரிவித்துள்ளார்.

சென்னையில் வசித்து வரும் இவருடைய வீட்டிற்கு சிறுவயதில் விக்னேஷ் மற்றும் அவருடைய அப்பா அழைத்து வருவார். சில நாட்கள் இங்கு தங்கி இருப்பார்கள். குலதெய்வக் கோவிலுக்குச் சென்று பொங்கல் வைக்கும் அது நான் தான் சொன்னேன் ஆனால் கோவிலுக்கு கூட என்னை அழைக்கவில்லை. அவர்கள் இருவரும் தனியாக சென்று பொங்கல் வைத்தார்கள்.

இதுவே எனக்கு வருத்தமாக இருந்த நிலையில் திருமணத்திற்கும் அழைக்காதது மிகவும் வருத்தமாக இருக்கிறது என கண்கலங்கி பேசியுள்ளார். இருந்தாலும் இருவரும் என்னுடைய வீட்டிற்கு விருந்துக்கு வந்தால் சந்தோஷப் படுவேன் என தெரிவித்துள்ளார்.

Director Vignesh Shivan Relative about Marriage
Director Vignesh Shivan Relative about Marriage