Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துபாய் ரேஸிங் களத்தில் அஜித்குமாரை சந்தித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா

Director Vignesh Shivan and actress Nayanthara met Ajith Kumar at the Dubai racing circuit.

துபாய் ரேஸிங் களத்தில் அஜித்குமாரை சந்தித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா

மே 1-ந்தேதி அஜித்தின் கார் ரேஸ் பற்றிய ஆவணப்படம் ரிலீஸாக உள்ளது. இது தொடர்பான தகவல்கள் பார்ப்போம்..

துபாய் 24H series கார் ரேஸில் கலந்து கொண்டிருக்கிறார் அஜித். அவரின் கார் பந்தய பயணம் குறித்த
ஆவணப்படத்திற்காக கவர் செய்து வருகிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். அந்த ஆவணப்படத்திற்கு இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

இந்நிலையில், அஜித் அணி பங்கேற்கு கார் ரேஸ்களை நேரில் கண்டு ரசிக்க சென்னையில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் கோலிவுட் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வகையில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் சென்றுள்ளனர்.

தன்னை பார்க்க துபாய்க்கு வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை வரவேற்றார் அஜித். மேலும் தன் அணி ரேஸ் வீரர்களிடம் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியிருக்கிறது. நயன்தாராவும், அஜித் குமாரும் சேர்ந்து படங்களில் நடித்திருப்பதால் அவர்களுக்கு இடையே நட்பு உள்ளது. விக்னேஷ் சிவனுக்கு அஜித் குமார் மீது தனி பிரியம் உண்டு.

அஜித்குமாரை வைத்து ஏ.கே. 62 படத்தை இயக்குவதாக இருந்தார் விக்னேஷ் சிவன். ஆனால், கதை பிரச்சினையால் முடியாமல் போனது. அதன் பிறகு அந்த வாய்ப்பு மகிழ்திருமேனிக்கு கொடுக்கப்பட்டது.

தற்போது, பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி நடிப்பில் LIK படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்நிலையில் துபாயில் அஜித்தை சந்தித்த நிகழ்வு பற்றி ரசிகர்கள், ஒரு வேளை அஜித் படத்தை இயக்கப் போகிறாரோ? அல்லது, ஆவணப்படத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் வருகிறார்களோ? என கேட்டு வருகின்றனர்.

முன்னதாக சத்யராஜ் தன் மனைவி, இரண்டு மகன்களுடன் துபாய் கார் ரேஸ் நடக்கும் இடத்தில் அஜித்தை சந்தித்து பேசினார். இந்த வீடியோ வெளியாகி வைரலானது.
அதற்கு முன்பு அபுதாபி ரேஸின்போது அஜித்தை சந்தித்தார் அனிருத்.

இந்நிலையில், அஜித் கார் ரேஸ் பற்றிய ஆவணப்படம் அவரின் பிறந்த நாளான மே 1-ந்தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது.

Director Vignesh Shivan and actress Nayanthara met Ajith Kumar at the Dubai racing circuit.
Director Vignesh Shivan and actress Nayanthara met Ajith Kumar at the Dubai racing circuit.