Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 68 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?வைரலாகும் தகவல்

director-venkat-prabhu-will-direct-thalapathy-68 movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என தகவல் பரவியது. அதே சமயம் அட்லீ இயக்கத்தில் நடிக்கப் போகிறார் எனவும் தகவல் பரவியது.

இப்படியான நிலையில் தளபதி விஜயின் அடுத்த படம் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தான் என தகவல் வெளியாகி உள்ளது. ஆமாம் இவர்கள் கூட்டணியில் உருவாக உள்ள படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜயின் பிறந்தநாள் தினத்தில் வெளியாக இருப்பதாகவும் தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அது மட்டுமில்லாமல் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

director-venkat-prabhu-will-direct-thalapathy-68 movie
director-venkat-prabhu-will-direct-thalapathy-68 movie