மங்காத்தா 2 திரைப்படம் குறித்து கேட்ட கேள்விக்கு வெங்கட் பிரபு பதில் அளிஅளித்துள்ளார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் அவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்றான மங்காத்தா திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அஜித்குமார், அர்ஜுன், திரிஷா, பிரேம்ஜி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்
இந்த படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு
இன்று ரீ ரிலீஸ் ஆன மங்காத்தா படத்தை காண சென்னை கமலா திரையரங்கிற்கு வந்திருந்தார் ரசிகர்கள் கொடுத்திருக்கும் வரவேற்பை பார்த்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மங்காத்தா 2 திரைப்படம் குறித்து கேட்டுள்ளனர்.
அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு மங்காத்தா ஒன் இப்பதான் வந்திருக்கு பாப்போம் என கூறியுள்ளார்.இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

director venkat prabhu update for mankatha 2 movie

