Director updates on the political thriller 'Karate Babu'..
அரசியல் த்ரில்லராக உருவாகும் ‘கராத்தே பாபு’ படம் பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்..
‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் வில்லனாக நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர் நடித்து வரும் படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்..
கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்து வரும் படம் ‘கரேத்தே பாபு. இதை, ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிக்கிறார். ‘அகிலன்’, ‘பிரதர்’ படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகனுடன் இந்நிறுவனம் இணைந்துள்ளது.
சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். அரசியல் கதையை கொண்ட இந்தப் படத்தில், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகிறார். கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
படம் பற்றிய பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, ‘அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படவில்லை. இந்த திரைப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கம் குறித்து அலசுகிறது.
உணர்வுப் பூர்வமான அரசியல் த்ரில்லராக இது உருவாகி வருகிறது. தற்போது போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடந்து வருகின்றன’ என்று தெரிவித்தார். ரவி மோகனின் 34-வது படமான இப்படத்தின் டீஸர் விரைவில் வெளியாக இருக்கிறது. இதன் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ் கொடுத்துள்ளார். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் அதனைத் தொடர்ந்து லவ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தனுஷ் 56 என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
வித் லவ் படம் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
முத்து எடுத்த முடிவால்மீனா பயத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த…
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…