கோலிவுட் திரை உலகில் வித்தியாசமான ஜொனரில் படங்களை இயக்கி பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து மோகன் ஜி-ன் பாகாசூரனில் நடித்து வரும் இவர் அவ்வப்போது தனது twitter பக்கத்தில் மோட்டிவேஷனலான பதிவுகளை பதிவிட்டு ரசிகர்களை மோட்டிவேஷன் செய்து வருகிறார். அதேபோல் அவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
அதில் அவர், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது ஒரு வகை. வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் எங்கெங்கோ அலைந்து திரிந்து , நுனியளவு ஊசிக் கயிற்றில் தொங்கி, ஏதோ தூசி போல தெரியும் வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேறிக் காட்டுவதுதான் உலகமே கைதட்டும் சாதனை என பதிவிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது ஒரு வகை. வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் எங்கெங்கோ அலைந்து திரிந்து , நுனியளவு ஊசிக் கயிற்றில் தொங்கி , ஏதோ தூசி போல தெரியும் வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேறிக் காட்டுவதுதான் உலகமே கைதட்டும் சாதனை. !
— selvaraghavan (@selvaraghavan) January 23, 2023

