director sanal kumar aressted
மலையாள நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று பதிவிட்ட மலையாள இயக்குனரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர். இவர் தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்துள்ளார். நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான, நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள இயக்குனர் சணல் குமார் சசிதரன் தனது வலைத்தளப் பக்கத்தில், நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், அவரை கந்து வட்டிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார். இவரின் இந்த பதிவு மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் மஞ்சு வாரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் சணல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மஞ்சு வாரியர் அளித்த புகாரில், சமூக வலைத்தளங்களில் தன்னை தொடர்ந்து அவமானப் படுத்துவதாகவும், தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சணல் குமார் செயல்படுவதாகவும், தான் செல்லும் இடத்திற்கு எல்லாம் பின் தொடர்ந்து வந்து என்னை தொந்தரவு செய்கிறார் என்றும் மஞ்சு வாரியர் குறிப்பிட்டுள்ளார்.
மஞ்சு வாரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள எர்ணாகுளம் காவல்துறை இயக்குனர் சணல் குமாரை கைது செய்துள்ளனர். அவரை கைது செய்யும் பொழுது எடுக்கப்பட்ட லைவ் வீடியோவையும் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…