தமிழ் சினிமாவில் மணிரத்தினத்தின் இயக்கத்தில் அவரது கனவு திரைப்படமாக நேற்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்-1”. இந்த படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, நடிகர் கார்த்தி, சரத்குமார், ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த திரைப்படம் உருவாகி இருப்பதால் படம் பற்றிய கதை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இருப்பினும் இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் கூட்ட கூட்டமாக பார்த்து வருகின்றனர். பலராலும் பாராட்டப்பட்டு வரும் இப்படத்தை தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குனருமாக திகழும் சமுத்திரகனி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் “காவியம்… உழைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி” என பதிவிட்டிருக்கிறார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.
காவியம்… உழைத்த ஒவ்வொருவருக்கும் ???????????????????????????????????????????????????????????????????????????????????????????? pic.twitter.com/xKFO7te6iV
— P.samuthirakani (@thondankani) October 1, 2022