director RJ Balaji is excited about Superstar Rajinikanth..!
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து கருப்பு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்தத் திரைப்படம் கோடை காலத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர் ஜே பாலாஜி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தது குறித்தும் அவருடன் நடந்த நேர்காணல் குறித்தும் விளக்கமாக பேசியுள்ளார்.
நான் சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் சாரை சந்தித்தேன். அவர் எவ்வளவு பெரிய ஜாம்பவான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தனது திட்டங்களை அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டார் என்று கூறினார்.
அவர் எந்த வகையான படங்களைச் செய்யப் போகிறார், அவற்றை எவ்வாறு அணுக திட்டமிட்டுள்ளார், மேலும் தனது அடுத்த நான்கு படங்களுக்காக அவர் பேசிய இயக்குனர்கள் பற்றி என்னிடம் கூறினார். இது எனக்கு உண்மையிலேயே உத்வேகமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 75 வயது மனிதர் தெளிவான ஐந்து ஆண்டு திட்டத்தைக் கொண்டுள்ளார் மற்றும் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே உற்சாகத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இது நம்பமுடியாதது என்று தெரிவித்து உள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…
மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…