இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் வேதனை! அனைவரும் பார்க்கும்படியான படம் வருமா?
ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எஜமான்’ படம் ரீ ரிலீஸ் தகவல் தெரிந்ததே. இந்நிலையில், அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ள விஷயம் வருமாறு:
‘ரெட் லேபில்’ படத்தில் புதுமுகங்கள் லெனின்-அஸ்வின் ஜோடி ஆகியுள்ளனர். பொன்.பார்த்திபன் கதை எழுத, கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, ‘ஒன்றை இங்கே சொல்லியாக வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாகச் சிறந்த கதைகள் வருவதில்லை. பாசமலர், குடும்பம் ஒரு கதம்பம் போன்ற கதைகள் இப்போது எங்கே வருகின்றன? அப்போது படங்களைப் பார்த்து விட்டு வந்தால் படங்களைப் பற்றி திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டு விமர்சனம் செய்து கொண்டிருப்பார்கள். படம் நன்றாக இருந்தால் குடும்பத்தோடு வண்டி கட்டிக்கொண்டு தியேட்டருக்குச் சென்ற காலம் அது.
இப்போது அப்படி இல்லை. அனைவரும் பார்க்கும்படி படம் எடுக்கிறார்களா? ஒரு சாராருக்கு மட்டுமே படம் எடுக்கிறார்கள். மற்றவர்கள் படம் பார்க்க வேண்டாமா? திரையரங்குகளில் ஏன் ஆள் வரவில்லை என்று கேட்கிறார்கள். ஒரு சாராருக்கு மட்டுமே படம் எடுக்கிறார்கள். அனைவரும் பார்க்கும் படியான வாழ்வியல் கதைகளை வைத்து படமாக எடுக்க வேண்டும். அப்படி இன்று படங்கள் வருவதில்லை’ என கூறியுள்ளார்.


