தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பா ரஞ்சித். தற்போது இவ்வளவு இயக்கத்தில் வேட்டுவம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கேங்ஸ்டர் படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
நடிகர் சிம்புவும் அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி கொடுத்திருப்பதால் இந்த நிலையில் வேட்டுவம் படத்தின் இயக்குனரான பா.ரஞ்சித் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கியுள்ளார்.
அதாவது அவர் 20 லட்சம் ரூபாய் அவரது குடும்பத்தினருக்கு கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.