Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி விஜய் உடன் சேர்ந்து நடிக்கும் இயக்குனர் மிஷ்கின்.!! வைரலாகும் புதிய தகவல்

director mysskin play negative roll for vijay movie update

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தான் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி படை பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமன் இசையில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் சிறப்பு போஸ்டர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட குழு வெளியிட்டு இருந்ததை தொடர்ந்து வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் அடுத்த வாரம் வெளியாகும் என்ற மகிழ்ச்சி தகவலையும் வெளியிட்டிருந்தது.

இந்த உற்சாகத்தில் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தை நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்து அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில் இப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அதாவது “தளபதி 67” திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல இயக்குனர் மிஷ்கினும் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

director mysskin play negative roll for vijay movie update
director mysskin play negative roll for vijay movie update