Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராஜமௌலியை புகழ்ந்து பேசிய மணிரத்தினம்.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க

director mani-ratnam-talk-about-rajamouli

மிகப்பெரிய பிரம்மாண்ட கதையான ‘கல்கி புகழ் பெற்ற பொன்னியன் செல்வன் நாவலை’ அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ள படம் தான் “பொன்னியின் செல்வன்-1”. இதில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்திக்,ஜெயம் ரவி, திரிஷா பிரகாஷ்ராஜ், பிரபு போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைக்கா நிறுவனம் வழங்க உள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்தின் அப்டேட்களை பட குழு அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான பொன்னி நதி பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் தற்போது அடுத்த பாடலுக்கான தகவலை படக்குழு அறிவித்திருந்தது. அதேபோல் நேற்று இப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான ‘சோழ சோழ’ பாடலின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதில் பேசிய மணிரத்தினம் நம் அனைவருக்கும் ஒரு கதவை திறந்து வைத்திருக்கிறார் ராஜமௌலி, இந்த மாதிரியான படத்தை எடுக்க முடியும் என்பதை எங்களுக்கு காட்டியுள்ளார்; 2 பகுதிகளாக கதை சொல்லி வெற்றி பெறலாம் என்று நிரூபித்து இருக்கிறார்; பாகுபலியால் தான் பொன்னியின் செல்வன் சாத்தியமானது, அவருக்கு நன்றி என்று மணிரத்னம் பாகுபலி படத்தை இயக்கிய ராஜமௌலியை பாராட்டி பேசியிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

director mani-ratnam-talk-about-rajamouli
director mani-ratnam-talk-about-rajamouli