Director Lokesh Kanagaraj to start shooting soon
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.
இதில் நடிகர் அர்ஜுன், இந்தி நடிகர் சஞ்சய்தத், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்துள்ளதையடுத்து இதில் இயக்குனர் மிஷ்கினும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் நிறைவுபெறவுள்ளதாகவும் அடுத்து சிறிது இடைவெளிக்கு பிறகு வரும் டிசம்பர் மாதம் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பினை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு…
பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் கடந்த…
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.…
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…