director lokesh kanagaraj and rajinikanth movie update
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதை முடித்த கையோடு தனது இறுதி படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியானது. தற்போது லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் அந்த படத்தை முடித்ததும் ரஜினி படத்திற்கான வேலைகளை தொடங்குவார் எனவும் சொல்லப்படுகிறது.
தற்போது இந்த படம் பற்றி சூப்பரான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது போலியான என்கவுண்டர் குறித்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ள இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆக்சன் கிங் அர்ஜுன் தற்போது லியோ படத்தில் நடித்து வரும் நிலையில் அதை தொடர்ந்து ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் படத்தில் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…