Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எத்தனை படம் வேண்டுமானாலும் இவரை வைத்து இயக்குவேன்.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

Director lokesh-kanagaraj-about-upcoming-movies

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் இந்த படத்தை தொடர்ந்து நடிகை கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார்.

கைதி படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கினார். அதன் பின்னர் நேற்று உலகம் முழுவதும் வெளியான கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருந்த விக்ரம் படத்தை இயக்கியிருந்தார்.

இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தளபதி விஜய்யை இயக்குவேன் என கேட்டதற்கு அடுத்த படத்தை இயக்க உள்ளேன். விஜய்யை வைத்து எத்தனை படம் வேண்டுமானாலும் இயக்குவேன் என தெரிவித்துள்ளார்.

மீண்டும் விஜய்யை இயக்க இருப்பதாக லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

 Director lokesh-kanagaraj-about-upcoming-movies

Director lokesh-kanagaraj-about-upcoming-movies