Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகரிடம் பேச்சுவார்த்தை… வெளியான சூப்பர் ஹிட் தகவல்

Director lokesh-kanagaraj-about-telugu-actors

தற்போது தமிழில் பிரபல இயக்குனராக திகழ்ந்து இருப்பவர்தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான மாநகரம்,கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இதையடுத்து சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான படம் தான் ‘விக்ரம்’. இதில் கமலஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில் போன்ற பிரபலங்களை வைத்து ஒரு மாசான பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் லோகேஷ்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் விஜயுடன் இணைந்து ‘தளபதி 67’ படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Director lokesh-kanagaraj-about-telugu-actors
Director lokesh-kanagaraj-about-telugu-actors