ஆபாச படத்தில் நடிக்க கூறி பெண் இயக்குனர் மிரட்டியதாக வாலிபர் புகாரளித்துள்ளார். இதையடுத்து அந்த பெண் டைரக்டர் லட்சுமி தீப்தா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். அந்த புகாரில் வெப் சீரியலில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு தருவதாக பெண் டைரக்டர் ஒருவர் கூறினார். அவரை நம்பி நானும் நடிக்க சென்றேன்.
இதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டேன். அதன்பின்னர் படப்பிடிப்புக்கு வருமாறு என்னை அழைத்தனர். ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த படப்பிடிப்புக்கு நானும் சென்றேன். அங்கு சென்ற பின்னர் தான் அவர்கள் எடுக்கும் படம் ஆபாச படம் என தெரியவந்தது. இதனால் நான் நடிக்க மாட்டேன் எனக்கூறினேன். இதனை கேட்டதும் அங்கிருந்தவர்கள் என்னை மிரட்டினர். படத்தின் பெண் இயக்குனரும் படத்தில் நடிக்காவிட்டால் அதற்காக நான் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதன்காரணமாக நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அதோடு என் குடும்பத்தினரும் என்னை ஒதுக்கிவிட்டனர். இதற்கு காரணமாக பெண் டைரக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுபோல இன்னொரு பெண்ணும், அதே பெண் டைரக்டர் மீது புகார் கூறியிருந்தார். இதையடுத்து அந்த பெண் டைரக்டர் லட்சுமி தீப்தா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பெண் டைரக்டர் லட்சுமி தீப்தாவை போலீசார் தேடி வந்த நிலையில் திருவனந்தபுரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பின்பு போலீசார் அவரை நெடுமங்காடு கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். நெடுமங்காடு கோர்ட்டு டைரக்டர் லட்சுமி தீப்தாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

director-accused-of-tricking-individuals-to-act-in-adult-web-series