அஜித் 64 படத்தின் அப்டேட் கலை அள்ளி வழங்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித் 64 படத்தையும் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று வெளியான மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸை ரசிகராக பார்த்த மகிழ்ந்த ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் 64 படம் குறித்த அப்டேட்டுகளையும் வழங்கி உள்ளார். அதாவது சூட்டிங் போறோம் படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு என்று கூறினார்.
மேலும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு எப்படி இருக்கும் என்று கேட்க ஏற்கனவே ரசிகர்களுக்காக GBU படம் எடுத்து விட்டதாகவும் இந்த திரைப்படம் முழுவதுமாக ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படம் ஆக இருக்கும் பிரஷ் சர்ப்ரைஸ் அதிகம் இருக்கிறது அடுத்தடுத்து வெளியாகும் என கூறியிருக்கிறார். இது மட்டும் இல்லாமல் பிப்ரவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

