தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் ஜோடி சேர்த்து நடித்து பிறகு ரியல் ஜோடிகள் ஆக திருமணம் செய்து கொண்டவர்கள் ரக்சிதா மற்றும் தினேஷ்.
தற்போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரக்ஷிதா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தினேஷ் தன்னுடைய முழு ஆதரவை கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் அவர் சீசன் 7ல் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில் தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சீரியலில் பிஸியாக நடித்து வருவதால் பிக் பாஸ் செல்லும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக ரக்ஷிதாவுக்கும் எனக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லை வழக்கு தான் சென்று கொண்டிருக்கிறது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
