வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இப்படம் வருகிற 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வாரிசு இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. ‘வாரிசு’ திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து ‘வாரிசு’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ வருகிற ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
வாரிசு இது தொடர்பாக தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதாவது, “தெலுங்கு ஹீரோக்கள் படங்களான ‘வீர சிம்ஹா ரெட்டி’, ‘வால்டர் வீரய்யா’ ஆகிய படங்களை முதலில் தியேட்டரில் பாருங்கள். இதன் காரணமாகதான் ‘வாரசுடு’ படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளோம்” என்று கூறினார். தில் ராஜு மேலும், “நான் கதையைத்தான் நம்புகிறேன். நடிகர்கள் அஜித் , ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா,தனுஷ் ஆகியோருக்கு ஏற்ற கதை கிடைத்தால் எதிர்காலத்தில் அவர்களின் படத்தை தயாரிப்பேன்” என தெரிவித்துள்ளார்.

dil raju about varisu movie