தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு திருசெல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். சீரியல் ஒளிபரப்பாக தொடங்கிய முதல் நாள் முதல் இன்று வரை தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றுள்ளது.
அதுவும் தற்போது பட்டம்மாள் பாட்டி என்று கொடுத்து குணசேகரனையும் அவனது குடும்பத்தையும் ஆட்டி படைத்து வருவது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது. ஒவ்வொருத்தர் பேசும் வசனங்களும் அனல் பறக்கிறது அதிலும் குறிப்பாக பட்டம்மாள் பாட்டி தெறிக்க விடுகிறார்.
இப்படி அனல் பறக்கும் வசனங்களை எழுதுவது யார் என தற்போது தெரியவந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கோலங்கள் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமான ஸ்ரீவித்யா தான் என தெரியவந்துள்ளது. குழந்தை நட்சத்திரம் நடிகை என படிப்படியாக வளர்ந்து இன்று வசனகர்த்தாவாக எதிர்நீச்சல் சீரியலில் பட்டையை கிளப்பி வரும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
