கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன்1 திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து இவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் துருவ நட்சத்திரம் திரைப்படம் குறித்த சூப்பரான தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
அதாவது, நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளில் நடிகர் விக்ரம் தங்களான் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தின் வெளியீடு தொடர்பான அப்டேட்களையும் விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
#ChiyaanVikram to complete remaining portions of #DhruvaNatchathiram after wrapping up #Thangalaan. Release related updates expected soon ????
— VCD (@VCDtweets) February 7, 2023

