Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அப்பாவிற்கு பிறகு எனக்கு இந்த நடிகரை தான் ரொம்ப பிடிக்கும்.. துருவ் விக்ரம் வைரல் அப்டேட்

Dhruv Vikram About Favourite Actor update

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவருடைய மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தன்னுடைய அப்பா விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மகான் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் நேற்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் மகான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் துருவ் விக்ரம் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டியில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் எனக் கேட்டதற்கு அப்பாவுக்கு அடுத்ததாக எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தளபதி விஜய் தான் என துருவ் தெரிவித்துள்ளார். இவர் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Dhruv Vikram About Favourite Actor update
Dhruv Vikram About Favourite Actor update