Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

CSK விளையாட்டை பார்க்க சேப்பாக் வந்த தனுஷ். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Dhanush yesterday CSK match watched in chepauk

கோலிவுட் திரை உலகில் பிரபல உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க சத்திய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் CSK Vs LSG அணிகளுக்குள் நடைபெற்ற கிரிக்கெட் விளையாட்டை நடிகர் தனுஷ் நேரில் சென்று கண்டு களித்துள்ளார். அதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.