கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்து மாபெரும் முன்னணி நடிகராக அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது வாத்தி திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களில் கமிட்டாகி பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் சமீபத்தில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டை நேரில் சென்று கண்டு களித்திருந்தார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிய வைரல் ஆனதை தொடர்ந்து தற்போது மீண்டும் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படகுழுவினருடன் பெங்களூரில் நடைபெற்ற கிரிக்கெட் விளையாட்டை கண்டு களித்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன்(RCB), சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி மோதியது. இதில் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியை நடிகர் தனுஷ் நேரில் சென்று கண்டுகளித்துள்ளார். அதன் புகைப்படத்தை கேப்டன் மில்லர் திரைப்படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
The Rocking #CaptainMiller duo @dhanushkraja & @NimmaShivanna at the #CSKVSRCB match now ????????????@ArunMatheswaran @sundeepkishan @priyankaamohan @gvprakash pic.twitter.com/Blop2g8l63
— Sathya Jyothi Films (@SathyaJyothi) April 17, 2023