Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரஜினி பட அப்டேட்டிற்கு தனுஷ் போட்ட பதிவு வைரல்

dhanush tweet about jailer movie release date update

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து உருவாகி இருக்கும் திரைப்படம் ஜெய்லர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் கன்னட முன்னணி நடிகர் சிவராஜ் குமார், நடிகர் மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் சென்னை, கடலூர் என தமிழ்நாட்டின் பல ஊர்களிலும், வெவ்வேறு இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழு நேற்றைய தினம் சிறப்பு வீடியோவுடன் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்த தகவல் இணையதளங்களில் பயங்கரமாக வைரலாகி வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பிற்கு நடிகர் தனுஷ் ட்விட் செய்துள்ளது ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்ததால் தனுஷுக்கும், ரஜினிக்கும் இடையே கருத்துவேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பிற்கு ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் பாசிட்டிவான ஸ்மைலி இமேஜ்களை பதிவிட்டிருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் ரஜினியின் தீவிரமான ரசிகர் என்பதை தனுஷ் நிரூபித்து காட்டி விட்டதாக கமெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.