தனுஷ் நடிக்கும் தனது 50வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 19ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக போஸ்டருடன் வெளியிடப்பட்டது.தொடர்ந்து இன்று ‘ராயன்’ படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவனும் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், \”உங்களை இயக்குவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை\” என நடிகரும், இயக்குனருமான தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் செல்வராகவனின் போஸ்டருடன் பதிவிட்டுள்ளார்.இதற்கு பதிலளிக்கும் விதிமாக, \”வாய்ப்பிற்கு நன்றி இயக்குனர் சார். உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்\” என செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Never thought I’ll direct you someday sir ???????? @selvaraghavan pic.twitter.com/X1TnkaGqAR
— Dhanush (@dhanushkraja) February 22, 2024