நெகட்டிவ் ரோலில் நடிக்கும் தனுஷ் ? கர இயக்குனர் விக்னேஷ் ராஜா கொடுத்த அப்டேட்ஸ்!
பன்முகத்திறமையாளர் தனுஷ் நடிக்கும் ‘கர’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகுன்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்பட டைட்டில் டீசர் வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றது.
‘கர’ என்ற டைட்டில் சற்று கலவையான விமர்சனங்களையே பெற்றது. டைட்டில் மாஸாக இல்லையே என சிலர் கூறினர். ஆனால், கர என்ற டைட்டில் இப்படத்தின் கதைக்களத்திற்கு மிக பொருத்தமானது என படக்குழு தெரிவிக்கிறது.
இப்படத்தில் தனுஷின் பெயர் கரசாமி, சுருக்கமாக ‘கர’ என அழைப்பர். இது டைட்டில் டீஸரிலேயே குறிப்பிடப்பட்டது.
மேலும் ‘கர’ என்ற பெயருக்கு திருடுவது மற்றும் பதுக்குவது என அர்த்தங்கள் உண்டு. இப்படம் கொள்ளையடிப்பதை பற்றிய கதைக்களம் என்பதால், இந்த டைட்டில் சரியாக இருக்கும் என இயக்கநர் கருதியதாக கூறப்படுகிறது.
அசோக்செல்வன் , சரத்குமார் காம்போவில் ‘ போர்த்தொழில்’ படம் இயக்கி வரவேற்பு பெற்ற விக்னேஷ் ராஜா ‘கர’ படத்தில் தனுஷின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசியிருக்கிறார்.
அவர் பகிர்ந்த தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது மட்டுமல்லாமல் ரசிகர்களை எதிர்பார்ப்புக்கு ஆக்கியுள்ளது. அதாவது, கர படத்தில் தனுஷ் சற்று நெகட்டிவ் ஷேடில் நடிக்கிறார்.
தனுஷை நெகட்டிவ் ஷேடில் காட்டுவது சவாலாகவும் சிறந்த அனுபவமாகவும் இருந்தது. ஆனால் நெகட்டிவ் ஷேட் கதாபாத்திரமாக இருந்தாலும், ரசிகர்கள் ரசிக்கும்படியான ரோலாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய வொர்க் செய்து இருக்கின்றோம். பல விவாதங்களுக்கு பிறகே தனுஷ் சாரின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கின்றோம் என்றார் இயக்குநர் விக்னேஷ் ராஜா .
ஏற்கனவே ‘நானே வருவேன்’ என்ற படத்தில் நெகட்டிவ் ஷேடில் தனுஷ் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து தற்போது மீண்டும் நெகட்டிவ் கலந்த கதாபாத்திரத்தில் தனுஷ் ‘கர’ படத்தின் நடிக்கின்றார். இருந்தாலும் பாஸிட்டிவ் ஹீரோவாகவே கலக்குவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


