தமிழ் சினிமாவில் அசுரன் போல் பல படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ். தற்போது ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தனுஷின் ஹாலிவுட் திரைப்படமான ‘தி கிரே மேன்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கான இரண்டாம் பாகம் குறித்த தகவலை தற்போது தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஆடியோ பதிவின் மூலம் வெளியிட்டு இருக்கிறார்.
இதனைப் நெட்டிசன்கள் பலர் இப்படத்தின் முதல் பாகத்தில் தனுஷின் கதாபாத்திரம் சிறியதாக இருந்ததால் ரசிகர்கள் வருத்தம் அடைந்த நிலையில் தற்போது இப்படத்திற்கான இரண்டாம் பாகம் வேறையா என்ற கேள்வியை தங்களது சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
The Gray Man universe is expanding and the sequel is coming… Lone Wolf is ready, are you? #TheGrayMan @agbofilms @netflix @Russo_Brothers pic.twitter.com/b8FuJk9koJ
— Dhanush (@dhanushkraja) August 6, 2022