தாய்க்கிழவி பாடலில் சில வரிகளை மாற்ற வேண்டும்..சமூக ஆர்வலர் புகார்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் அவர்கள் நடித்திருக்கிறார். இவர்களின் கூட்டணியில் வெளியான யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற மூன்று படங்களுமே ரசிகர்களிடையே தனுஷிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது உருவாகியிருக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து முதல் பாடலான “தாய்க் கிழவி”என்ற பாடல் ஜூன் 24 ஆம் தேதியன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்த இந்தப் பாடலின் மீது தற்போது புகார் எழுந்துள்ளது.

அதாவது அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடலை தனுஷ் எழுதி பாடியிருக்கிறார். இந்தப் பாடல் வீடியோ யூ-ட்யூபில் 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இருக்கிறது. இந்நிலையில் இப்பாடலின் வரிகள் வேடிக்கையாக இருந்தாலும், சமூக ஆர்வலர் ஒருவர் பாடலின் சில வரிகள் பெரியவர்களை மரியாதை செய்யாத வகையில் உள்ளதாக புகார் அளித்திருக்கிறார். மேலும் இப்பாடலில் இருக்கும் சில வரிகளையும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

dhanush-thai-kelavi-song-issues
jothika lakshu

Recent Posts

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

23 hours ago

Jai Jai Rama Video Song

Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…

23 hours ago

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

2 days ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

2 days ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

2 days ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

2 days ago