விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல்
பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது ‘போர்த்தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘கர’ படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், வீடியோ வந்து வரவேற்பு பெற்றன.
இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ், தமிழரசன் பச்சமுத்து, ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரின் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். இவ்வாறு செம பிஸியாக இருக்கும் தனுஷ், தனது திரைப் பயணத்தில் முன்னதாக நிகழ்ந்த ஒரு நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்.
அதாவது தளபதி விஜய் நடிப்பில் வெங்கடேஷ் இயக்கிய படம் பகவதி. அந்தப் படத்தில் விஜய்க்கு தம்பியாக ஜெய் நடித்திருப்பார். ஆனால், அந்த ரோலில் முதலில் தனுஷை நடிக்க வைக்க விரும்பினார் வெங்கடேஷ். ‘துள்ளுவதோ இளமை’ படம் வந்த சமயத்தில் தனுஷிடம் கதை சொல்ல விரும்பினார் வெங்கடேஷ். பகவதி பட தயாரிப்பு நிறுவனம் லட்சுமி மேக்கர்ஸ் செய்த ஏற்பாட்டில் தனுஷை சந்தித்தார். அப்போது விஜய்யின் தம்பி கேரக்டரில் நடிக்க பகவதி கதையை கேட்கிறோம் என தெரியாமல், தனுஷ் கேட்டிருக்கிறார்.
கதையை கேட்டு முடித்துவிட்டு இதில் நான் என்ன செய்கிறேன் என கேட்க; தம்பி கேரக்டர்தான் இதில் செய்கிறீர்கள் அதற்காகத்தான் கதை சொல்ல வர சொன்னேன் என வெங்கடேஷ் சொல்ல; இல்லை என்னிடம் அப்படி சொல்லவில்லை. நீங்கள் கதை சொல்வதாக ம்ட்டும்தான் சொன்னார்கள் என சொல்லிவிட்டு; நான் தம்பி கேரக்டர் எல்லாம் செய்வதில்லை என கூறியிருக்கிறார் தனுஷ். இருந்தாலும் அவரை எப்படியாவது சமாதானம் செய்துவிடலாம் என நினைத்த இயக்குநர், ‘நீங்கள் மட்டும் இதில் நடித்தீர்கள் என்றால் விஜயகாந்த்தோடு நடித்து விஜய் எப்படி பி&சி சென்டர்களில் இறங்கினாரோ, அதேபோல் நீங்களும் இறங்கலாம்’ என சொல்லியிருக்கிறார். அதற்கு தனுஷோ, ‘காதல் கொண்டேன் படம் வந்தாலே நான் பி&சி சென்டர்களில் இறங்கிவிடுவேன்’ என உறுதியாக கூறியுள்ளார். அதுபோலவே ரசிகர்களை ஈர்த்தார்’ என கோலிவுட் வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.
தற்போது தனுஷ் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் தனித்து திகழ்கிறார். அன்றைய இந்த நிகழ்வு தற்போது இணையவெளியில் பரவலாக தெறிக்கிறது.


